Skip to content

Latest commit

 

History

History
16 lines (10 loc) · 5.19 KB

File metadata and controls

16 lines (10 loc) · 5.19 KB
title கூட்டு முயற்சி மாநாடு
layout about

கூட்டு முயற்சி மாநாடு

Node.js-இன் கூட்டு முயற்சி மாநாடு என்பது தற்போதைய மற்றும் வருங்கால பங்களிப்பாளர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு மாநாடாகும். இது கலந்துரையாடல், கல்வி மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றின் மூலம் Node.js-ஐ மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகத்தைச் சேர்ந்த குழுக்கள், பணிக்குழுக்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை நேரில் சந்தித்துக் கொள்கிறார்கள். இந்த சந்திப்புகள் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், தாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்பும் உற்சாகமான திட்டங்களில் இணைந்து பணியாற்றுவதற்கும் ஒரு சிறந்த தளமாக அமைகின்றன.

யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கூட்டு முயற்சி மாநாடு முக்கியமாக தற்போதைய பங்களிப்பாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்காக நடத்தப்படுகிறது. இருப்பினும், இதுவரை பங்களிப்பு செய்யாத, ஆனால் புதிதாக இணைய விரும்பும் நபர்களையும் இது அன்புடன் வரவேற்கிறது. நீங்கள் Node.js பங்களிப்பிற்கு புதியவராக இருந்தால், இந்த மாநாடு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதன் மூலம் சமூகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதோடு, உங்களிடம் உள்ள திறமைகளைப் பயன்படுத்தியும், புதிய திறன்களை வளர்த்துக் கொண்டும் நீங்கள் Node.js-க்கு பங்களிக்கத் தொடங்கலாம்.

இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே, பங்களிப்பாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் தாங்கள் விவாதிக்க விரும்பும் தலைப்புகளைச் சமர்ப்பித்து ஒரு கால அட்டவணையை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் பங்கேற்பாளர்கள் நேரில் வருவதற்கு முன்பே, அங்கு என்னென்ன விவாதங்கள் நடக்கப்போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அங்கு வந்தவுடன், முதலில் பொதுவான விவாதங்களில் கலந்துகொண்டு, பின்னர் தங்களுக்கு விருப்பமான குறிப்பிட்ட தலைப்புகளில் ஆழமாக ஈடுபடலாம். இது தவிர, முறைசாரா உரையாடல்கள் மற்றும் புதிய யோசனைகளை உருவாக்குவதற்கான ஏராளமான வாய்ப்புகளும் அங்கு அமையும்.

வரவிருக்கும் மற்றும் கடந்த கால Collaboration Summit பற்றிய தகவல்களுக்கு, பின்வரும் இணைப்புகளைப் பார்க்கவும் மாநாட்டின் தரவுத்தளம் பங்களிப்பாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் எதைப் பற்றி விவாதிக்க முன்மொழிந்துள்ளனர் என்பதை அறிய இந்த இணைப்பைப் பார்க்கவும்.